தமிழ்நாடு

முதுநிலை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

DIN


முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (புதன்கிழமை) வெளியிட்டார்.

முதுநிலை மருத்துவப் படிப்பின் மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். மாநில இடங்கள் 1,163 மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 1,053 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:

"எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜனவரி 27-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 27 இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் பங்கேற்கின்றனர். ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீட்டின் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதன்பிறகு, 30-ம் தேதியிலிருந்து இணையதளங்களில் கலந்தாய்வு நடைபெறுகிறது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT