தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை

17th Jan 2022 08:03 AM

ADVERTISEMENT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னையின் வடபழனி, கிண்டி, அடையாறு, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து கொண்டிருக்கிறது.

மேலும், புறநகர் பகுதிகளான ஆவடி, தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

ADVERTISEMENT

Tags : Chennai Rain
ADVERTISEMENT
ADVERTISEMENT