தமிழ்நாடு

ஜன. 18 முதல் திருச்சி - திருப்பதிக்கு நேரடி விமான சேவை

4th Jan 2022 12:10 PM

ADVERTISEMENT

 

திருச்சி: ஜன. 18 முதல் திருச்சியிலிருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையும், சென்னை, பெங்களூர், தில்லி உள்ளிட்ட உள்நாட்டு சேவைகளும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜன. 18ஆம் தேதி முதல் இச்சேவை தொடங்கப்பட உள்ளது. வார நாள்களில் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நான்கு கிழமைகளில் திருப்பதியிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். இது மாலை 6.20-க்கு திருச்சியை வந்தடையும். பின்னர் திருச்சியிலிருந்து மாலை 6.40 க்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT