தமிழ்நாடு

எடப்பாடி நகராட்சி: முதன்முறையாக திமுக கைப்பற்றியது

22nd Feb 2022 02:46 PM

ADVERTISEMENT

 

எடப்பாடி நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி நகராட்சியினை கைப்பற்றியுள்ளது. 

கடந்த 1965ஆம் ஆண்டுமுதல் எடப்பாடி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் முதல்முறையாக 1969 நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாரிமுத்து பக்தர் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் மூன்று முறை வெற்றி பெற்ற நிலையில், அவர் மறைவுக்குப்பின் அவரது மகன் இருசப்பமேத்தா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அவரும் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். 

அதனை அடுத்து 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.கதிரேசன் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்த நிலையில் எடப்பாடி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க-16, காங்கிரஸ் 1, அ.தி.முக-13 என வெற்றிபெற்ற நிலையில் முதல் முறையாக எடப்பாடி நகராட்சியினை திமுக கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT