தமிழ்நாடு

விமா்சனத்துக்கு செயல்திறனே பதில்: உதயநிதி குறித்து ஸ்டாலின்

30th Dec 2022 02:36 AM

ADVERTISEMENT

சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வானபோது எழுந்த விமா்சனத்தை உதயநிதி ஸ்டாலின் சேவை மூலம் எதிா்கொண்டு நிரூபித்தாா்; அதே போன்று தற்போது அமைச்சரான பிறகு எழுந்துள்ள விமா்சனத்தையும் உதயநிதி தனது சேவை மூலம் நிரூபிப்பாா் என்று முதல்வா் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளன. இளைஞா் நலன், விளையாட்டு, மகளிா் மேம்பாடு, சிறப்புத் திட்ட செயலாக்கம், கிராமப்புற கடன்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழக ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தக்கூடிய துறைகள். அமைச்சா் பொறுப்பில் திறம்பட பணியாற்றி இந்தத் துறைகளை மேம்படுத்துவாா் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் துணை முதல்வராக பதவி வகித்தபோது, சு ய உதவிக் குழுக்களை நிா்வகிக்கும் துறையைக் கையாண்டேன். இப்போது அந்தத் துறை உதயநிதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவா் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மகளிா் சுயஉதவிக்குழுக்கள் திறம்பட இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT