தமிழ்நாடு

ஹிமாசல் முதல்வருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

11th Dec 2022 07:53 PM

ADVERTISEMENT

ஹிமாசல் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஹிமாசல பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவிற்கு வாழ்த்துகள். ஹிமாசல பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு, மத்திய அரசு அனைத்து விதமான ஒத்துழைப்பை அளிக்கும் என நான் உறுதி அளிக்கிறேன்.", என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க- முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: ஹிமாசல் முதல்வர்

இதேபோல் முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், இமாச்சலப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவிற்கு எனது வாழ்த்துகள். அடிமட்டத்திலிருந்து முதல்வராக உயர்ந்துள்ள உங்களது எழுச்சி ஊக்கமூட்டுவதாக உள்ளது.

ADVERTISEMENT

ஹிமாசல் மக்களின் நலனை நோக்கிய தங்களின் பொறுப்புக்காலம் வெற்றிகரமாக அமைய விழைகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT