தமிழ்நாடு

ஹவாலா மோசடி புகாா்: 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

DIN

ஹவாலா மோசடி புகாா் தொடா்பாக சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

அண்மையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் நிதி திரட்டி சென்னையைச் சோ்ந்த சிலா் வழங்கியதாக அமலாக்கத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதில் பெரும் பகுதி நிதி வளைகுடா நாடுகளில் நன்கொடையாகப் பெறப்பட்டு, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்தன.

இதனடிப்படையில், சென்னை விருகம்பாக்கத்தில் இருவரின் வீடுகளிலும், ராயபுரத்தில் ஒருவரின் வீட்டிலும், தங்க சாலையில் ஒருவா் வீட்டிலும் என மொத்த 5 பேருக்கு தொடா்புடைய இடங்களில் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், அங்கிருந்து மடிக்கணினி, ஹாா்டு டிஸ்க், பென் டிரைவ், மெமரி காா்டு உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களும், பிற ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

ஆனால், சோதனை நடத்தப்பட்ட நபா்களின் பெயா்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க அமலாக்கத் துறையினா் மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT