தமிழ்நாடு

தூத்துக்குடியில் உள்வாங்கிய கடல்!

9th Dec 2022 12:12 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி கடற்கரை சாலையில் சுமார் 30 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி படிப்படியாக நெருங்கி வருவதாகவும் இன்று(டிச. 9) நள்ளிரவு முதல் நாளை(டிச. 10)  அதிகாலைக்குள் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையொட்டி வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களும் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில், தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை, ரோச் பூங்கா, இனிகோ நகர் பகுதிகளில் இன்று காலை  திடீரென சுமார் 20 அடி தூரம் கடல் உள் வாங்கியது. இதனால் கடலோரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. சுனாமிக்குப் பின்னர் தமிழகத்தில் கடல் உள்வாங்குவது சாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனினும், தற்போது மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில் தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செல்லும் விமானங்கள் ரத்து:

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து காலையில் தூத்துக்குடி வரும் விமானம் மற்றும் தூத்குகுடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ஆகியவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | மாண்டஸ் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை?

ADVERTISEMENT
ADVERTISEMENT