தமிழ்நாடு

சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

9th Dec 2022 11:05 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தரப்பில் இன்று(டிச. 9) பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் தற்போது நடைபெற்று வரும் ஜெய்ப்பூருக்கு வந்துள்ள சோனியா காந்தி, அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார். 

இந்நிலையில் சோனியா காந்திக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 

ADVERTISEMENT

'ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிக்க | மாண்டஸ் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை?

ADVERTISEMENT
ADVERTISEMENT