தமிழ்நாடு

மாண்டஸ் புயல்: சென்னையில் எந்தெந்த இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது? 

DIN

மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி சென்னையில் திருவிக நகரில்  81 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அண்ணாநகர் மேற்கு - 78 மி.மீ, கோடம்பாக்கத்தில் 77 மி.மீட்டர், திருவொற்றியூரில் 75 மி.மீட்டர் கனமழை பதிவாகியுள்ளது. 

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமாா் 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமாா் 460 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி, வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கக் கூடும்.

இதன் காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.9, 10) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில், சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வெள்ளி மாலை முதல் சனிக்கிழமை காலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷமாக வீசுகின்றன. வெள்ளிக்கிழமை இரவு இப்பகுதியில் கரையை கடக்க உள்ளது. 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது.  

36 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 4.15 மி.மீ. ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 26.66 மி.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக  0.05 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் விபரம்: சராசரி மழை அளவு (மி.மீ.) நாகப்பட்டினம் - 26.66 மி.மீ, ராமநாதபுரம் - 15.49 மி.மீ,  செங்கல்பட்டு - 14.71 மி.மீ, சென்னை -13.75 மி.மீ,  திருவள்ளூர் -13.20 மி.மீ, காஞ்சிபுரம் 13.10 மி.மீ, திருவாரூர் -10.61 மி.மீ, மயிலாடுதுறை - 10.22 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிகள் விபரம்: 
திருவிக நகர் - 81 மி.மீ, அண்ணாநகர் மேற்கு - 78 மி.மீ, கோடம்பாக்கம் - 77 மி.மீ, திருவொற்றியூர் - 75 மி.மீ, தேனாம்பேட்டை - 74 மி.மீ, ஐஸ் ஹவுஸ் - 72 மிமீ, கொளத்தூர் - 70 மி.மீ, தண்டையார்பேட்டை - 69 மி.மீ, மாதவரம் - 69 மி.மீ, நுங்கம்பாக்கம் - 68 மி.மீ, நந்தனம் - 68 மி.மீ, ராஜா அண்ணாமலைபுரம் - 68 மி.மீ, மீனம்பாக்கம் - 67 மி.மீ, கத்திவாக்கம் - 65 மி.மீ, பெரம்பூர் - 63 மி.மீ, அமைந்தக்கரை - 62 மி.மீ, மணலி - 61 மி.மீ, புழல் - 60 மி.மீ, புதிய மணலி நகரம் - 60 மி.மீ, மெரினா (டிஜிபி அலுவலகம்) - 56, முகலிவாக்கம் - 56 மி.மீ, அடையாறு - 54 மி.மீ, பெருங்குடி - 53 மி.மீ, எம்ஜிஆர் நகர் - 51 மி.மீ, அயனாவரம் - 50 மி.மீ, ஆலந்தூர் - 50 மி.மீ, பாலவாக்கம் - 50 மி.மீ, தரமணி - 50 மி.மீ, வானகரம் - 50 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மாண்டோஸ் அதித் தீவிர புயலானது காற்று முறிவினால் பலம் குறைந்து, வெறும் சாதாரண புயலாக மாறியுள்ளது. அதனால் தான் தற்போது அதன் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. 

மாலை நேரத்தில் புயல் சென்னையை நெருங்கும்போது அதன் வேகம் அதிகரித்து காணப்படும். அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவரை மழை விட்டு விட்டு பெய்யும்.

டெல்டா பகுதியில் இத்துடன் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT