தமிழ்நாடு

மாண்டஸ் புயல்: சென்னையில் 25 விமானங்கள் ரத்து

9th Dec 2022 05:22 PM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, தற்போது வலுவிழந்து புயலாக மாறியுள்ள நிலையில், இன்று(டிச. 9) நள்ளிரவு முதல் நாளை(டிச. 10) அதிகாலைக்குள் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஏர் ஏசியா விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  அரசுப் பேருந்துகள் இன்று இரவு இயங்குமா? - போக்குவரத்துத் துறை விளக்கம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT