தமிழ்நாடு

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

DIN


மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், புதுச்சேரி, காரைக்கால் கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. 

மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இதனால் புதுச்சேரி, காரைக்காலிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல புதுச்சேரி, காரைக்கால் கடற்கரைக்கு பொழுதுபோக்குக்காகவும், சுற்றுலாவினரும் செல்லக்கூடிய நிலையில், யாரும்  கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT