தமிழ்நாடு

புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறையில் நாளை விடுமுறை

8th Dec 2022 08:49 PM

ADVERTISEMENT

 

'மாண்டஸ்' புயல் காரணமாக புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.9) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். 

படிக்க மாண்டஸ் புயல்: 6 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயங்காது!

ADVERTISEMENT

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.

'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காரைக்காலிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. 

 படிக்க: மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெறும்: மாநகராட்சி உதவி எண் அறிவிப்பு!

இதனால், பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT