தமிழ்நாடு

மாண்டஸ் புயலின் நகரும் வேகம் குறைந்தது: கரையை கடப்பதில் தாமதம்?

DIN

மாண்டஸ் புயலின் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதால், கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் வலுப்பெற்றது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த தாழ்வு மண்டலம் நேற்று மாலையே புயலாக மாறும் என கணிக்கப்பட்ட நிலையில், நகரும் வேகம் குறைந்ததால் புயலாக வலுபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது புயலின் நகரும் வேகமானது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது காரைக்காலுக்கு 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதனால், நாளை(டிச.9) இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை நள்ளிரவு ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில்  மிக கனமழை பெய்யும் எனவும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT