தமிழ்நாடு

சென்னை அண்ணாசாலை ரிச்சி தெருவில் தொழில்வரி செலுத்தாத 90 கடைகளுக்கு சீல்!

8th Dec 2022 08:35 AM

ADVERTISEMENT


சென்னை அண்ணாசாலை அருகே ரிச்சி தெருவில் தொழில்வரி செலுத்தாத 90 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு, நிகழ் நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரை, தொழில்வரி பாக்கி வைத்திருப்பவா்கள் பட்டியல் மாநகராட்சி வெளியிட்டிருந்தது. 

இதையும் படிக்க | ஆட்சிக் கவிழ்ப்பு சதி: ஜொ்மனியில் 25 போ் கைது

ADVERTISEMENT

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் - 05 கோட்டம் 62க்குட்பட்ட பகுதியான அண்ணாசாலை அருகே ரிச்சி தெருவில் நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமலும், தொழில் உரிமம் பெறாமலும் நடைபெற்று வந்த 90 கடைகள், பாரிமுனை நயினியப்பன் தெருவில் 30 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 

நீண்ட காலமான தொழில்வரி செலுத்தாமல் நிலுவலையில் வைத்ததால் பெருநகர சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, பிரிவு397(ஏ)ன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT