தமிழ்நாடு

தமிழக - ஆந்திர எல்லையில் சாலையைக் கடக்கும் யானைகள்: வைரல் விடியோ!

8th Dec 2022 01:01 PM

ADVERTISEMENT

வேலூர்: தமிழக - ஆந்திர எல்லையோரம் யானைகள் கூட்டம் சாலையை விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக - ஆந்திர எல்லையில் சோதனைச் சாவடி அருகே முசலமடுகு பகுதியில் குடியாத்தம்-பலமனேரி சாலையில் வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்தன.

அப்போது குடியாத்தம் - பலமனேரி சாலையில் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானைகள் சாலையைக் கடப்பதை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT