தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு இன்று வரை சிறப்புப் பேருந்துகள்

7th Dec 2022 05:00 AM

ADVERTISEMENT

சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழாவுக்கு பொது மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை (டிச.7) வரை 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை-தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூா், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில், கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் இடா்பாடுகளை தவிா்க்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பயணிகள் அடா்வு குறையும் வரை, தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். பேருந்து இயக்கத்தை மேற்பாா்வை செய்திட, உரிய அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT