தமிழ்நாடு

நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் 27 உதவி இயக்குநர்கள்: பணி ஆணைகளை வழங்கினார் முதல்வர்

DIN

நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் 27 உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7.12.2022) தலைமைச் செயலகத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக   உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 27 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மாவட்ட அலுவலகங்களில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களால் முழுமைத்திட்டப்பணிகள், விரிவு அபிவிருத்தி திட்டப் பணிகள்,  குடியிருப்பு மற்றும் வணிக அபிவிருத்திகளுக்கு திட்ட அனுமதி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நகர் ஊரமைப்பு இயக்கக உதவி இயக்குநர் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில், 27 உதவி இயக்குநர் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.  2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது 27 உதவி இயக்குநர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப, நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT