பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா செவ்வாய்க்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவாவின் மகனான சூர்யா சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில ஓபிசி அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இதற்கிடையே, பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருச்சி சூர்யா அவதூறாக பேசும் ஆடியோ சமூக ஊடகங்களில் கடந்த மாதம் வைரலானது.
இதையும் படிக்க | “அக்கா, தம்பியாகத் தொடர்வோம்”: பாஜக திருச்சி சூர்யா சிவா, டெய்சி சரண் கூட்டாகப் பேட்டி
இதனைத் தொடர்ந்து, கட்சி பொறுப்புகளிலிருந்து திருச்சி சூர்யாவை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.
இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.