தமிழ்நாடு

திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

6th Dec 2022 01:48 PM

ADVERTISEMENT

 

பாபர் மசூதி இடிப்பு தினத்தைக் கண்டித்து திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை பாசிச எதிர்ப்பு தினமாக எஸ்டிபிஐ கட்சியினர் கடைடிபித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சிலை முன்பாக எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெ.பஷீர் அகமது தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அச.உமர்பாரூக்  சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். 

படிக்க: அஜித்தா! விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்.. பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்

ADVERTISEMENT

இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது, 

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 ஐ வலுவாக அமல்படுத்த வேண்டும்.மத்திய, மாநில அரசுகளும், நீதித்துறையும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.இதாயத்துல்லா, தெற்கு மாவட்டத் தலைவர் எம்.ஹாரிஸ்பாபு, வர்த்தக அணி மாவட்ட நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT