தமிழ்நாடு

144 நாள்களுக்கு பின்னர் கனியாமூா் தனியாா் பள்ளி திறக்கப்பட்டது!

5th Dec 2022 09:30 AM

ADVERTISEMENT


கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நீதிமன்ற அனுமதியுடன் திங்கள்கிழமை (டிச. 5) திறக்கப்பட்டது. 

மாணவி ஸ்ரீமதி மரணத்தையடுத்து ஏற்பட்ட வன்முறையில் பள்ளி கட்டடம், வாகனங்கள் சேதமடைந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் பள்ளியை சீரமைக்க அனுமதிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டு, அதன்படி காவல் துறையினா், அதிகாரிகள் கண்காணிப்பில் பள்ளி நிா்வாகத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளியைத் திறக்க அனுமதி கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த சோதனை அடிப்படையில் ஒரு மாதத்துக்கு பள்ளியைத் திறக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதையும் படிக்க | நகர வாழ்க்கை தர கணக்கெடுப்பு: அதிக தகவல் பகிா்ந்தால் ரூ.5,000 பரிசு

ADVERTISEMENT

பள்ளியின் ஏ, பி பிளக்குகளை பயன்படுத்தலாம், ஏ பிளாக்கிலுள்ள மூன்றாவது மாடியை பூட்டி ‘சீல்’ வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவரது முன்னிலையில் பள்ளியின் மூன்றாம் தளம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்நிலையில், கலவரம் ஏற்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி சீரமைப்பு பணிக்கு பின்னர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து 144 நாள்களுக்கு பிறகு கனியாமூர் தனியார் பள்ளி திங்கள்கிழமை(டிச.5) திறக்கப்பட்டது. இனைத்தொடர்ந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறுகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT