தமிழ்நாடு

ஜி-20 மாநாடு: எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் அழைப்பு

DIN

ஜி-20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க  தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு இறுதியில் நடக்கும் ஜி-20 மாநாடு தொடர்பாக தில்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

உலகின் வலிமைமிக்க ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபிறகு முதலாவது கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் திங்கள்கிழமை (டிச. 5) நடைபெறுகிறது. இதில் ஜி-20 கூட்டமைப்பின் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

இந்திய தலைமையின் கீழ் நடைபெறவுள்ள ஜி20 கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இதுவாகும். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் உயரதிகாரிகள் உதய்பூா் சென்றடைந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படாததால், அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT