தமிழ்நாடு

இனி சிட்டி யூனியன் வங்கி மூலமும் ஜிஎஸ்டி செலுத்தலாம்!

2nd Dec 2022 02:01 PM

ADVERTISEMENT

 

ஜிஎஸ்டி கவுன்சிலின் கீழ் இயங்கும் சரக்கு மற்றும் சேவைவரி நெட்வொர்க் அமைப்பு தற்போது ஜிஎஸ்டி செலுத்தும் வங்கிகளில் ஒன்றாக சிட்டி யூனியன் வங்கியையும் இணைத்துள்ளது.

இப்போது, அனைத்து சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்களும் ஜிஎஸ்டி இணையதளம் வாயிலாக தங்கள் வங்கிக் கணக்கு மூலம் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் இனி வங்கிகளின் பட்டியலில், சிட்டி யூனியன் வங்கியைத் தேர்ந்தெடுத்து வரித்தொகையை செலுத்த வேண்டும்.

தற்போது வங்கிகளின் பட்டியலில் ஜிஎஸ்டி கவுன்சில் சிட்டி யூனியன் வங்கியை இணைத்திருப்பதன் மூலம், சிட்டி யூனியன் வங்கியின் வலுவான தொழில்நுட்ப தளத்திற்கு கூடுதல் சான்றாக அமைந்திருப்பதாகவும். எளிதான மற்றும் பாதுகாப்பான நிதிப்பரிவர்த்தனைகளை செலுத்துவதற்கு சிட்டி யூனியன் வங்கி தற்போது (எஸ்எம்இ) மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு பல புதுமையான வசதிகளை வழங்கி வருகிறது என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக சிட்டி யூனியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர் என்.காமகோடி கூறுகையில், 

வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிப் பரிவர்த்தனைகளை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்ய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். எங்கள் வங்கி குறு, சிறு மற்றும் நடுத்தர(MSME) வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கியாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் சிட்டி யூனியன் வங்கி மூலம் ஜிஎஸ்டி செலுத்த வசதியாக இருக்கும்.

வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்றவகையில் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் புதுமையான சேவைகளை வழங்குவதில் சிட்டி யூனியன் வங்கி முன்னணியில் உள்ளது. டிஜிட்டல் கையொப்பங்கள், க்யூஆர் குறியீடு, விடியோ கேஒய்சி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகள், யுபிஐ123 பே, ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்துதல், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான மேம்படுத்தப்பட்ட பரிவர்த்தனை வரம்பு மற்றும் மொபைல் வங்கியின் குரல்வழி அங்கீகாரம் (குரல்பயோமெட்ரிக்) ஆகியவை எங்கள் டிஜிட்டல் சேவைகளில் அடங்கும். 

சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் இந்தியாவின் பழமையான தனியார் துறை வங்கி, 1904இல் நிறுவப்பட்டது மற்றும் தமிழ்நாட்டில், கும்பகோணத்தில் தலைமையகம் உள்ளது. எங்கள் வங்கி நாடு முழுவதும் 730 கிளைகள் மற்றும் 1679 ஏடிஎம்கள் உள்ளன.

வாடிக்கையாளர்களின் பல்வேறு பரிவர்த்தனை தேவைகளைப் பூர்த்தி செய்ய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவைகள் வழங்குவதில் சிட்டி யூனியன் வங்கி எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. வணிக விற்பனை நிலையங்களில் பாதுகாப்பான முறையில் பணப்பரிவர்த்தனையை விரைவாக முடிக்க முடியும் என்பதால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை வளர்த்து வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிட்டி யூனியன் வங்கி எளிமையான பணம் செலுத்தும் வகையில் டெப் மற்றும் பே கி செயின் மற்றும் ஈஸ்ஸி பே, ஃபிட்னஸ்வாட்ச் டெபிட்கார்டு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் ஒரு பகுதியாக, சிட்டி யூனியன் வங்கி கிராமப்புற பிரிவினருக்கும் சேவை செய்யும் வகையில் சாதாரண அம்சத் தொலைபேசிகள் மூலம் யுபிஐ பணம் செலுத்துவதற்கான யுபிஐ123 சேவையை அறிமுகப்படுத்தியது. சிட்டி யூனியன் வங்கியின் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள கம்மத்தில் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT