தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

1st Dec 2022 08:27 AM

ADVERTISEMENT

 

மேட்டூர்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 119.55 அடியாகச் சரிந்தது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. புதன்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10,233 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழணை காலை வினாடிக்கு 10,880 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | 3 மாதங்களில் 17 லட்சம் யூடியூப் விடியோக்கள் நீக்கம்

ADVERTISEMENT

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 400 கனஅடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 118.73 அடியாக சரிந்தது. அணை நீர் இருப்பு 91.45 டி.எம்.சி ஆக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT