தமிழ்நாடு

செப்.7-ல் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

19th Aug 2022 05:50 PM

ADVERTISEMENT

செப்டம்பர் 7ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, செப்டம்பர் 7ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம்
வருகிறார். சென்னை வரும் அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாத யாத்திரையை ராகுல் தொடங்கி வைக்க உள்ளார். பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பாதயாத்திரை நடைபெற உள்ளது என்றார்.

இதையும் படிக்க- 'முந்தைய காதல்' பற்றி உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பேசியுள்ளீர்களா?

ADVERTISEMENT

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல்காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை 148 நாள்கள் 3,500 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளவுள்ளாா். செப். 7-இல் நடைபயணத்தைத் தொடங்கும் ராகுல்காந்தி, நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம், களியக்காவிளை வழியாக கேரள மாநிலம் செல்கிறாா்.

தமிழகத்தில் தொடா்ந்து 3 நாள்கள் நடைபயணம் மேற்கொள்கிறாா் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT