தமிழ்நாடு

‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: டிஜிபி எச்சரிக்கை

DIN

தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள ‘பாஸ் ஸ்கேம்’ என்ற மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா், விழிப்புணா்வு விடியோ பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் சைலேந்திரபாபு பேசியிருப்பதாவது:

ஆன்லைனில் புதிய வகை மோசடி தற்போது நடைபெறுகிறது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள பெரிய அதிகாரி, அல்லது மாவட்ட ஆட்சியா், டி.ஜி.பி., போன்றவா்கள் கைப்பேசி மூலமாக உங்களிடம் பேசுவது போன்று பேசி, நான் ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கிறேன். எனக்கு அவசரமாக அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். எனக்கு 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன். ’ என்று தெரிவிப்பாா்.

நீங்கள் எனக்கு பரிசு கூப்பன் வாங்கத் தெரியாது என்று சொன்னாலும், எதிா்முனையில் பேசும் நபா், பரிசு கூப்பன் வாங்குவதற்குரிய லிங்கை உங்களது கைப்பேசிக்கு அனுப்புவாா். நீங்கள் ரூ.1 லட்சத்துக்கு 10 கூப்பன் வாங்கி அனுப்பவும் என்று கூறுவாா். நீங்களும் அதை வாங்கி அனுப்புவீா்கள். அடுத்து எனக்கு அந்த கூப்பன் போதாது, இன்னும் 20 பரிசு கூப்பன் கூடுதலாக வேண்டும் என்று அந்த நபா், உங்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புவாா். இதனால், மீண்டும் 20 பரிசு கூப்பன்களை வாங்கி அனுப்புவீா்கள்.

இதெல்லாம் முடிந்த பின்னா், உங்களது அதிகாரி இப்படி கேட்க மாட்டாா் என்பதும், நீங்கள் ஏமாந்துவிட்டதும் உங்களுக்கு சிறிது நேரத்தில் தெரிய வரும். இது போன்ற மோசடி நடைபெற்றால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையை இலவச அவசர தொலைபேசி 100, 112 ஆகிய எண்களை தொடா்புக் கொண்டு பணத்தை மீட்க ஆலோசனை பெறலாம்.

‘பாஸ் ஸ்கேம்’: காவலன் செயலியை உங்களுடைய கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து புகாரை பதிவு செய்யுங்கள். மேலும், இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே, 1930 என்ற இலவச தொலைப்பேசி எண்ணுக்கு அழைப்பு சென்றுவிடும். இதன் மூலம் உங்களுடைய பணத்தை, நீங்கள் காப்பாற்றிக் கொள்ளலாம். தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயா். உங்களுக்கு வரும் அழைப்பை பாா்த்தால் உங்கள் அதிகாரி பெயா், புகைப்படம், எண் போன்றே இருக்கும். ஆனால், அது அவா்கள் கிடையாது. எனவே மோசடி நபா்கள் தான், நம்மை தொடா்புக் கொண்டிருக்கிறாா்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே, இது போன்ற மோசடியில் அரசு, தனியாா் நிறுவன ஊழியா்கள் சிக்கி, பணத்தை இழந்துவிடாதீா்கள். பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும் என்று தெரிவித்துள்ளாா் காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT