தமிழ்நாடு

ஒண்டி வீரன் நினைவு அஞ்சல் தலை: நாளை வெளியிடுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி

19th Aug 2022 03:54 PM

ADVERTISEMENT

ஒண்டி வீரன் நினைவு அஞ்சல் தலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை வெளியிடுகிறார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20-ஆம் தேதி (நாளை) திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. 

மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசிங் ஜெய்சிங்பாய் சௌஹான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சல் தலையை வெளியிட்டு உரையாற்றுகிறார்.

இதையும் படிக்க- தில்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை

ADVERTISEMENT

அஞ்சல்தலையை பெற்றுக் கொண்டு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரையாற்றுகிறார். 

மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். மாமன்னர் ஒண்டி வீரன் தேசியப் பேரவை இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT