தமிழ்நாடு

கம்பத்தில் வில்வித்தை போட்டி: 200-க்கும் மேலானோர் பங்கேற்பு

19th Aug 2022 02:17 PM

ADVERTISEMENT

 


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் அல்அஜ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் முதல் முறையாக வில்வித்தை சாம்பியன்ஷிப் - 2022 பட்டத்திற்கான போட்டிகள் கம்பம் அல்அஜ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தாளாளர் நைனார் முகமது தொடங்கி வைத்தார். ஏ.அகமது மீரான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

ADVERTISEMENT

வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்.

இதையும் படிக்கலாம் | கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம்

தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேலான மாணவ, மாணவியர் மற்றும் 60 வயதுள்ள பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை லெவல் 1 கோச், வில்வித்தை பயிற்சியாளர் ஜி.கார்த்திக் செய்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT