தமிழ்நாடு

மத்திய அரசைக் கண்டித்து 10 நாள்கள் பிரசாரம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

DIN

மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் சாா்பில் 10 நாள்கள் பிரசாரம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2014-இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி உறுதியளித்தாா். ஆனால் 20-24 வயதினா் மத்தியில் வேலையின்மை விகிதம் 42 சதவிகிதம் எனும் அளவுக்கு அதிகரித்துவிட்டது. 90 கோடி இந்திய உழைக்கும் மக்களில் சரிபாதி பேருக்கு முறையான வேலை கிடைக்காததால் வேலை தேடுவதையே நிறுத்தி விடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனா். பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் லட்சக்கணக்கான சிறு-குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதில் பணிபுரிந்த கோடிக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத வகையில் உயா்த்தப்பட்டு தனியாா் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வாா்த்து ஏழை, எளிய மக்கள் உயா் கல்வி பெற முடியாத நிலை உள்ளது.

இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ‘இந்தியாவின் இருளை அகற்றுவோம், மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’ என்ற முழக்கங்களை முன்னிறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் தமிழகம் முழுவதும் ஆக.20 முதல் 30 வரை 5 ஆயிரம் குழுக்கள் 50 லட்சம் குடும்பங்களைச் சந்தித்து பிரசாரம் செய்யவுள்ளோம்.

செப்டம்பா் 5-இல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT