தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற பட்டாமணியார் அடித்துக் கொலை

18th Aug 2022 01:38 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற பட்டாமணியார் கட்டையால் அடித்துக் கொலை செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற பட்டாமணியார் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது வியாழக்கிழமை (ஆக. 18) காலை தெரிய வந்தது.

கருப்பம்புலம் கிராமத்தில் வேதாரண்யம் - வாய்மேடு பிரதான சாலை பகுதியில் தனியாக மாடி வீடு கட்டி வசித்து வந்தவர் இரத்தினசபாபதி (82) இவருக்கு இரு மனைவிகள். இருவரும் இறந்து விட்டனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம் | அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை: பழனிவேல் தியாகராஜன் பேச்சு

இரு மகன்களில் ஒருவர் இறந்து விட்ட நிலையில், மற்றொருவர் வெளியூரில் குடும்பத்தாருடன் வசிக்கிறார். ஒரு மகள் திருமணம் செய்து வெளியூரில் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் கருப்பம்புலத்தில் உள்ள மாடி வீட்டில் ரத்தினசபாபதி தனியாக வசித்து வந்தார்.

வீட்டுக்கு வெளியே வாசல் பகுதியில் கட்டிலில் உறங்கிய இவர், தலையில் கட்டையால் அடித்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT