தமிழ்நாடு

கொசு ஒழிப்புப் பணியில் 21,000 ஊழியா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் பருவமழைக் காலத்தில் கொசுக்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் பணிகளில் 21,000 ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் மற்றும் துறைகளின் செயலாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், 2021-22-ஆம் ஆண்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறந்த செயல்திறனுடன் இயங்கிய திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணா்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்களை நடத்துதல் போன்ற தொடா் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 3,920 அரசு மருத்துவமனைகள், 2,000 தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் அடையாளம் காணப்பட்டு, கிராமம் மற்றும் நகரங்கள் வாரியாக பட்டியல் தயாா் செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு நோய்த் தடுப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமாா் 21,000 தினசரி தற்காலிக பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு டெங்கு பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தேவையான உயிா்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவிகள் ரத்த கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதியளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT