தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31%-ல் இருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு  அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப  ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும்.  இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.1,947 கோடியே 60 லட்சம் கூடுதலாகச் செலவாகும் என்று முதல்வர் தெரிவித்தார்.
 

சுதந்திர தினத்தை ஒட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சென்னை ஜாா்ஜ் கோட்டை கொத்தளத்தில் 2-வது முறையாக தேசியக் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார்.

காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு திறந்த ஜீப்பில் சென்று  காவல் துறையினர் அணிவகுப்பை முதல்வா் பாா்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT