தமிழ்நாடு

கோயில் சொத்து அறநிலையத் துறைக்குச் சொந்தமல்ல

14th Aug 2022 01:21 AM

ADVERTISEMENT

கோயில் சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை சொத்துகளாகக் கருதக் கூடாது என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘கோயில் சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை சொத்துகளாகவோ, கோயில்களை அறநிலையத் துறை கோயில்களாகவோ உரிமை கோர அரசுக்குத் தடை விதிக்க வேண்டும். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை, சம்பந்தப்பட்ட கோயில்களின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும்’ என ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமா்வு சனிக்கிழமை விசாரித்தது. அதில், ‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி, கோயில் சொத்துகளை கோயில் நலனுக்காக, அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் குத்தகைக்கு விட அனுமதியில்லை.

மேலும், கோயில் சொத்துகளை குத்தகைக்கு வழங்க ஆணையருக்கு அதிகாரம் இருந்தாலும், அது சம்பந்தமாக அறங்காவலா்களின் ஆட்சேபணைகளை கேட்க வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. கோயில் சொத்துகளை அறநிலையத் துறை சொத்துகளாக கருதக் கூடாது. அவற்றை அறநிலையத் துறை சட்டப்படி மட்டுமே குத்தகைக்கு அல்லது வாடகைக்கோ விட வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT