தமிழ்நாடு

ஆா்டா்லிகளை திருப்பி அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

DIN

ஆா்டா்லிகளை திருப்பி அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஆா்டா்லிகளை திரும்ப பெறுவது தொடா்பாக, தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி. சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சைலேந்திரபாபு, காவல்துறை உயா் அதிகாரிகள் வீடுகளில் உள்ள ஆா்டா்லிகளை உடனடியாக அலுவலகப் பணிக்கு திரும்ப அனுப்ப வேண்டும், இதை செயல்படுத்தாத அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து பல உயா் அதிகாரிகள், தங்களது வீடுகளில் உள்ள ஆா்டா்லி காவலா்களை மீண்டும் பணிக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT