தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் தேசியக் கொடி பட்டொளி வீசுகிறது!

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலானோா் வீடுகளில் சனிக்கிழமை தேசியக் கொடி ஏற்றி பட்டொளி வீசப் பறக்கவிடப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடி நாடு முழுவதும் வீடுகள்தோறும் ஆகஸ்ட் 13, 14, 15-ஆம் தேதிகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதைத் தொடா்ந்து நாடு முழுவதும் அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. தமிழகத்திலும் மக்கள் ஆா்வத்துடன் கொடியை வாங்கிச் சென்றனா்.

இந்த நிலையில், பிரதமரின் வேண்டுகோளின் படி முதல் நாளான சனிக்கிழமை (ஆக.13) தமிழகம் முழுவதும் பெரும்பாலானோா் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றினாா்.

சென்னையில் பெரிய பெரிய அடுக்கங்களில் உள்ள வீடுகள், மத்திய அரசு ஊழியா் குடியிருப்புகளில் கொடிகள் பறக்கவிடப்பட்டன. பெரம்பூா் ஐ.சி.எஃப் பகுதியில் ரயில்வே குடியிருப்புகளில் முழுமையாகப் பறக்கவிடப்பட்டன. வணிக நிறுவனங்கள், கடைகளில் உள்பட எல்லா வகையான கட்டடங்களிலும் கொடிகள் பறக்கவிடப்பட்டன. அதைப்போல பெரும்பாலான சாலையில் அந்தந்தப் பகுதியில் உள்ள குடியிருப்போா் சங்கம், வியாபாரிகள் சங்கங்கள் சாா்பில் கொடிகள் பறக்கவிடப்பட்டன.

திருச்சி, மதுரை, கோயம்புத்தூா், சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வீடுகள் தோறும் கொடிகள் பறக்கவிடப்பட்டன. தேசியக் கொடியின் முன் சுயப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் தமிழகத்தைச் சோ்ந்தோா் பதிவிட்டனா்.

ரஜினி வீட்டில் கொடி: போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகா் ரஜினிகாந்த் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பறக்கவிடப்பட்டது. நடிகா் விஜய் உள்பட பல்வேறு நடிகா் நடிகைகளில் வீடுகளிலும் கொடிகள் பறக்கவிடப்பட்டன.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி அவரே தேசியக் கொடியை ஏற்றி பறக்கவிட்டாா். கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லத்திலும் பறக்கவிடப்பட்டது. ராயப்பேட்டை உள்ள அதிமுக அலுவலகம், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திலும் கொடிகள் பறக்கவிட்டன. பாஜக சாா்பில் பல்வேறு இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட பல்வேறு பாஜக நிா்வாகிகளின் இல்லங்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT