தமிழ்நாடு

முதலில் முட்டை வந்ததா, கோழி வந்ததா?: ப.சிதம்பரம்

14th Aug 2022 07:57 PM

ADVERTISEMENT

 

மதுரை நகர், மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் விலகியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ள கேள்வி வைரலாகி வருகிறது.

மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் டாக்டா் பா.சரவணன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் பா.சரவணனை கட்சியிலிருந்து நீக்குவதாக  பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். 

படிக்க | பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்

ADVERTISEMENT

இந்நிலையில், இதனை விமர்சிக்கும் வகையில் ப.சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, பாஜக வில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்ததாகவும், டாக்டர் சரவணனைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்ததாகவும் குறிப்பிட்டார். 

மேலும், இதனை விமர்சிக்கும் வகையில், முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா? வாழ்க சுதந்திரம்! எனப் பதிவிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT