தமிழ்நாடு

பாஜகவின் போலியான தேசபக்தி அம்பலம்: மு.க.ஸ்டாலின்

14th Aug 2022 05:41 PM

ADVERTISEMENT

 

மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் மற்றும் தேசியக்கொடியின் மோது காலணி வீசியதன் மூலம் பாஜகவின் தேசபக்தி போலியானது என்பது அம்பலமாகியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே பாஜகவினர் மலினப்படுத்தி இருக்கிறார்கள்.

வீரமரணம் எய்திய இராணுவ வீரருக்கு உண்மையாகவே அஞ்சலி செலுத்த நினைத்திருந்தால் அவரது வீடு தேடிச் சென்று, குடும்பத்தினரைச் சந்தித்து, வீரரின் உடல் சுமந்த பெட்டி அங்கே வந்ததும் இறுதி வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

படிக்கஅமைச்சர் கார் மீது காலணி வீச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

விடுதலையின் 75-ஆவது ஆண்டினை வெறும் அரசியலுக்காகப் பயன்படுத்தும் இவர்களோ, ஊர் ஊருக்கு விளம்பரம் தேடும் பயணத்தில் ஈடுபட்டு வருவதால், போகிற வழியில் இராணுவ வீரருக்கும் மரியாதை செலுத்துவது போல அரசியல் இலாபம் தேடலாம் என்ற கணக்குடன், சட்டவிதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்று, தேசியக் கொடியை அவமதித்துள்ளனர்.

பழனிவேல் தியாகராஜன் இந்த வன்முறை நிகழ்வின் உண்மையைத் தெரிவித்து,  மிகுந்த கண்ணியத்துடன் தனது கருத்துகளைத் வெளிப்படுத்தியிருப்பதுடன், தனது காரில் வீசப்பட்ட ஒற்றைச் செருப்பை அதற்குரிய ‘சிந்த்ரெல்லா’ வாங்கிச் செல்லலாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் தராதரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT