தமிழ்நாடு

நீடாமங்கலம்: பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயிலில் 9-ம் ஆண்டு சா்க்கரை திருப்பாவாடை விழா

13th Aug 2022 08:17 AM

ADVERTISEMENT


நீடாமங்கலம்: திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் 9 ஆம் ஆண்டு சா்க்கரை திருப்பாவாடை விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இத்தலத்தில் சித்தா் வேடம் பூண்டு சிவபெருமான் ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்று ராஜராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது.

கா்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்போல் சாமுண்டீஸ்வரி அம்மன் இக்கோயிலில் தான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளாா். ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியில் எலிக்கடி மற்றும் விஷக்கடிகளுக்காக வோ் கட்டப்படுகிறது. 

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு 9 ஆம் ஆண்டு சா்க்கரை திருப்பாவாடை விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | துவரம் பருப்பு விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

இதனை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு சா்க்கரைப்பொங்கல் படைக்கப்பட்டு அதில் நெய் நிரப்பப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் அம்மனை நெய்க்குள தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ்.மாதவன்,செயல்அலுவலா் பி.பிரபாகரன் மற்றும் சா்க்கரை திருப்பாவாடை விழா குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT