தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட குரங்கு, பாம்புகள், ஆமைகள்

13th Aug 2022 08:36 PM

ADVERTISEMENT

பேங்காக்கிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட பாம்புகள், குரங்கு, ஆமைகள் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பேங்காக்கிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த தனியார் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சட்டவிரோதமாக விலங்குகளை கடத்தி வருவதாக ரகசியத் தகவல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஒரு குரங்கு, 15 அரிய வகை பாம்புகள், 5 மலைப்பாம்புகள் மற்றும் 2 ஆமைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. அவற்றை உடனடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள் மீண்டும் அவற்றை பேங்காக்கிற்கே திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT