தமிழ்நாடு

மானாமதுரை வீர அழகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

13th Aug 2022 02:21 PM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் நடைபெற்று வரும் ஆடிப் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உள்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழாவில் 10 ஆவது நாளாக  தீர்த்தவாரி உற்சவத்துக்காக, கடந்த வெள்ளிக்கிழமை பட்டத்தரசி கிராமத்தார் மண்டகப்படிக்கு அழகர் புறப்பாடானார். இக்  கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரளாக கோயிலுக்கு வந்து மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன்  வீர அழகரை அழைத்துச் சென்றனர்.  கடைவீதிகளில் வியாபாரிகள் அழகருக்கு பூஜைகள் நடத்தினர். 

ADVERTISEMENT

அலங்காரக் குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

குதிரை வாகனத்தில்  புறப்பட்டுச் சென்ற அழகர் மண்டகப்படிக்குப் போய்ச் சேர்ந்ததும் தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் மாலையில் அருகேயுள்ள அலங்காரக்குளத்தில் அழகருடன் உடன் வந்த சக்கரத்தாழ்வருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. 

இதையும் படிக்க| திருவொற்றியூர்: ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி பிறந்தநாள்!

அதைத் தொடர்ந்து மண்டகப்படியில் அழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் இங்கு தங்கி அருள்பாலித்த அழகர் சனிக்கிழமை காலை மண்டகப்படியிலிருந்து குதிரை வாகனத்தில்  கோயிலுக்கு புறப்பாடானார். அண்ணாமலை நகர் உள்ளிட்ட வீதிகளில் ஆரோகனித்து வந்த அழகரை மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு வாசல் தெளித்து கோலமிட்டு வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். 

அதைத்தொடர்ந்து அழகர் கோயிலுக்குச் சென்றடைந்தார். அழகரின் தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு  பட்டத்தரசி கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT