தமிழ்நாடு

சுதந்திர நாள்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

DIN

சென்னையில் சுதந்திர நாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சென்னை போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 15.08.2022-ஆம் தேதி சென்னை கோட்டையில் சுதந்திர நாள் விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 15.08.2022 காலை 06.00 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் முடியும் நேரம் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து கீழ்கண்ட வகைகளில் மாற்றியமைக்கப்பட உள்ளது.
1. உழைப்பாளர் சிலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடிமரச்சாலையிலும் அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர பிற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும்.
2.காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
3.பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை இராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.
4.அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
5.முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT