தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 775 பேருக்கு கரோனா தொற்று

13th Aug 2022 09:08 PM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் புதிதாக 775 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 775 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 35,58,029 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க | ஹிமாச்சலில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றம்

 

ADVERTISEMENT

மேலும் 1067 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 35,12,316 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் யாரும் பலியாகவில்லை. இன்றைய நிலவரப்படி 7,680 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT