தமிழ்நாடு

சேலத்தில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் தார் சாலை: இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் பரபரப்பு

12th Aug 2022 01:02 PM

ADVERTISEMENT

 

சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் புதைத்தபடி தார் சாலை போடப்பட்டு இரவோடு இரவாக அகற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தற்போது சாலைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலிருந்த சாலையை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

ADVERTISEMENT

அப்போது, சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் அப்படியே தார் சாலையை போட்டுள்ளனர்.

இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றி அதன் மீது மண்ணைக் கொண்டு மூடி உள்ளனர்.

ஒப்பந்ததாரர்களின் இந்த நடவடிக்கை செவ்வாய்பேட்டை வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இது குறித்த தகவல் காட்டுதீ போல் பரவியதைடுத்து ஒப்பந்ததாரர்கள் இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றி அதன் மீது மண்ணைக் கொண்டு மூடி உள்ளனர்.

இதையும் படிக்க | கோவை சாய்பாபா காலனிப் பகுதியில் சொமாட்டோ டெலிவரி பாய்க்கு அடி உதை

ஒப்பந்ததாரரின் இந்த நடவடிக்கை பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

வேலூா் மாநகரில் ஏற்கெனவே இருசக்கர வாகனம், ஜீப்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டதன் தொடா்ச்சியாக, சத்துவாச்சாரியில் அடி பம்ப்பை அகற்றாமல் புதைத்தபடி கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சேலத்தில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் போடப்பட்ட தார் சாலை இரவோடு இரவாக அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT