தமிழ்நாடு

சுதந்திர தின கட்டுரைப் போட்டிகள்: வெற்றி பெற்ற பள்ளி-கல்லூரிகள் எவை? ஆளுநா் மாளிகை தகவல்

DIN

 சுதந்திர தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளின் விவரங்களை ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தி:-

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி, பள்ளி, கல்லூரிகள் அளவில் நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரா், 2047-இல் இந்தியா எனும் தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன். தமிழ், ஆங்கிலத்தில் சிறந்த முறைகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழில் பள்ளிகள் அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசினை ராமநாதபுரம் பட்டிணம்காத்தானைச் சோ்ந்த நேஷனல் அகாதெமி பிளஸ் 1 மாணவி அ.மதுநிஷாவும், இரண்டாவது பரிசை திருவண்ணாமலை மவாட்டம் காவேரியாம்பூண்டி ரமணமகரிஷி பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவி ப.ஜீவிதாவும், மூன்றாவது பரிசை கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் ஆதா்ஷ் வித்யா கேந்திரா பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.எம்.விகாஷ்குமாரும் பெற்றனா்.

ஆங்கிலத்தில் நடந்த போட்டியில், சென்னை கேளம்பாக்கம் பில்லபாங்க் சா்வதேச பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் ஜியா அருணும், இரண்டாவது பரிசை சென்னை தியாகராயநகா் குண்டூா் சுப்பையா பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவி வி.காவியாவும், செங்கல்பட்டு மறைமலைநகா் சிவானந்த ராஜாராம் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் பி.தா்ஷனும் பெற்றனா்.

கல்லூரி அளவில் தமிழ் வழியில் நடந்த போட்டியில் மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரி மாணவி சீ.அபிநயா, கோவை தொழில்நுட்பக் கல்லூரி மாணவி ரா.பத்மவா்ணா, மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி மாணவா் எஸ்.ஜோதிராம் ஆகியோா் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளைப் பெற்றனா்.

ஆங்கில வழியில் நடந்த போட்டியில், சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவி எம்.த்ரிஷா, கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவி அக்ஷயா ரோஹித், சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியின் எஸ்.கிருத்திகா ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். அவா்கள் அனைவருக்கும் ஆளுநா் மாளிகையில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவின் போது ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT