தமிழ்நாடு

தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகம் அகத்தியமலை

12th Aug 2022 01:12 PM

ADVERTISEMENT

நெல்லை மாவட்டம் அகத்திய மலைப் பகுதியை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பக பகுதிகள் உள்ள நிலையில் மேலும் ஒரு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்திய மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை அகத்திய மலையை யானைகள் காப்பகமாக மாற்றப்படும்  என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்திய மலை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உலக யானைகள் தினத்தையொட்டி, இந்தியாவில் மேலும் ஒரு யானைகள் காப்பகத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT