தமிழ்நாடு

போரூர் அருகே காரில் சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; 6 பேர் கைது

11th Aug 2022 05:20 PM

ADVERTISEMENT

போரூர் அருகே காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கடத்தி கூட்டுப் பலாத்காரம் செய்து நகைகளை பறித்தது தொடர்பாக 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

2 நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரிடமிருந்து தங்க நகைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க |  'நாய் கூட சாப்பிடாது' தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்

 சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அய்யப்பன்தாங்கல் வழியாக காரில் சென்றுள்ளார். கார் ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளார். அய்யப்பன்தாங்கலை அடுத்த கொளுத்துவான்சேரி அருகே சென்றபோது 6 பேர் காரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ஓட்டுநரை தாக்கி விரட்டி உள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு கார் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 300 அதிகாரிகள், 120 வாகனம்.. வருமான வரித்துறையின் பிரமாண்ட சோதனை: கிடைத்ததோ வெறும் ரூ.390 கோடி

இந்த நிலையில்,, கத்திமுனையில் காரோடு பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள முட்புதருக்குள் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று 6 பேரும் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அவரைத் தாக்கி அவர் அணிந்திருந்த 8 சவரன் நகைகளையும் பறித்துக் கொண்டு 6 பேரும் தப்பியோடினர். இந்த நிலையில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த போரூர் போலீஸார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் போரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT