தமிழ்நாடு

திருச்சியில் இளைஞர் குத்தி கொலை

9th Aug 2022 08:02 PM

ADVERTISEMENT


திருச்சியில் மது கூடத்தில் ஏற்பட்ட தகராறு இளைஞர் ஒருவர் இன்று மாலை குத்தி கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் பாலாஜி நகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் சரண்ராஜ் (35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தனது நண்பர்களுடன் உறையூர் பகுதிக்கு வந்தார். அங்கு சாலை ரோடு பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையின் மது கூடத்தில் அமர்ந்து, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறில் தொடங்கி கைகலப்பானது. பின் கொலையில் முடிந்தது. இதில் சரண்ராஜ் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவல் அறிந்த உறையூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT