தமிழ்நாடு

பிரதமர் மோடியை சந்தித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

9th Aug 2022 03:22 PM

ADVERTISEMENT

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். 

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி, ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக்கு பிறகு, திடீரென திங்கள்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றார்.

தில்லியில் உள்ள புதுச்சேரி இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். புதுவை மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள், நிகழாண்டு பட்ஜெட்டுகான நிதி ஒப்புதல், கூடுதல் நிதி கோருதல் உள்ளிட்டவை குறித்து பேசியதாகத் தெரிகிறது. 

ADVERTISEMENT

முன்னதாக, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். 

முதல்வர் ரங்கசாமி இன்று மாலை புதுச்சேரி திரும்ப உள்ளார். 

இந்த சந்திப்பினால் புதுவை அரசுக்கு மத்திய அரசின் நிதி உதவி கிடைப்பதுடன், என்.ஆர் காங்கிரஸ்-பாஜக இடையே அதிருப்தி விலகி இணக்கமான சூழல் ஏற்படும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி வட்டாரத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT