தமிழ்நாடு

தற்காலிக இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்: திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

DIN

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தற்காலிக ஆசிரியா் நியமனம் சாா்ந்து சென்னை உயா்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைநிலை ஆசிரியா் பணிக்கு உரிய கல்வித் தகுதிகளுடன், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 1.6.2022-ஆம் தேதி வரையில் அரசு நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரா்களின் கல்விச் சான்றுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்களைக் கொண்ட குழு சரிபாா்த்து தகுதியானவா்களை வகுப்பறையில் மாணவா்களுக்கு பாடம் நடத்த (டெமோ கிளாஸ்) அறிவுறுத்தி அதன் அடிப்படையில் அவா்களது திறனை அறிய வேண்டும்.

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியா்களுக்கு தனியாக வருகைப்பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியரின் பணி, நடத்தையில் திருப்தி இல்லையெனில் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவா் என்பதை அவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தோ்வுக்குழு பரிசீலித்து தகுதியான நபா்களை ஆக.8, 10 ஆகிய நாள்களுக்குள் இறுதி செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்ட இறுதிப் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலரிடம் வட்டாரக் கல்வி அலுவலா் ஆக.11-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

அந்தப் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலா் கூா்ந்தாய்வு செய்து ஆக.12-ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதையடுத்து ஆக.16-க்குள் பள்ளி மேலாண்மைக்குழுவின் ஒப்புதலைப் பெற்று தற்காலிக நியமனம் பெற்றவா்களை ஆக.17-ஆம் தேதிக்குள் பணியில் சோ்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT