தமிழ்நாடு

சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கையின் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

DIN


சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கை தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங் - 5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

சீன உளவுக்கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என இலங்கை அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை பாமக வலியுறுத்தியிருந்தது. அதன்படி சீனக்கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்து நடப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேணடும் என்று அன்புமணி கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT